Naga Chaitanya Sobhita Dhulipala | Akhil Akkineni Zainab Ravdjee File Pic (Photo Credit: @iamnagarjuna X | @itsme_ijk X)

நவம்பர் 28, ஐதராபாத் (Cinema News): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா (Naga Chaitanya), கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின் பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இருவரும் தங்களின் பாதைகளில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபேலாவை (Sobhita Dhulipala) ஆகியோரது திருமணம் டிசம்பர் 04-ஆம் தேதி, அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற உள்ளது. Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!

இதற்கிடையில், நாகார்ஜுனாவின் (Actor Nagarjuna Akkineni) இரண்டாவது மனைவி அமலாவுக்கு பிறந்த ஒரே மகனான நடிகர் அகில் என்பவருக்கு ஜைனாப் ரவ்ட்ஜி என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதனால், நாகார்ஜுனாவின் இரு மகன்களும் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதை நாகார்ஜுனா மறுத்துள்ளார். நாகார்ஜுனா இரண்டு திருமணங்களும் இடைவெளியில் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். மேலும், அகில் - ஜைனாப் ரவ்ட்ஜி (Akhil Akkineni - Zainab Ravdjee) ஆகியோரது திருமணம் 2025-ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.