Aarti Ravi: ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்புக்கு, ஆர்த்தி எதிர்ப்பு; பரபரப்பு குற்றச்சாட்டு.!
தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவி அறிவித்துள்ள விவாகரத்து தொடர்பான தகவல், தன்னை மனரீதியாக கடுமையாக பாதித்துவிட்டது என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11, சென்னை (Cinema News): ஜெயம் திரைப்படத்தின் வாயிலாக, தமிழ் திரைப்பட நடிகராக அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி (Jayam Ravi) பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்று இருந்தார். சமீபகாலமாக அவரின் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானாலும், பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதனிடையே, நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை (Aarthi Ravi) விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக கவனிக்கப்பட்ட ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி பிரிவது உறுதி செய்யப்பட்டது. Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!
ஆர்த்தி ரவி (Aarti Ravi) அறிவிப்பு:
இந்நிலையில், "தனது கவனத்திற்கு வராமல் விவாகரத்து (Jayam Ravi Aarthi Divorce) குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு முழுக்க முழுக்க ஜெயம் ரவியின் சொந்த முடிவு ஆகும். திருமண வாழ்க்கை மூடு குறித்து வெளியான அறிக்கையை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் கடந்த 18 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து இருக்கிறது. விவாகரத்து என்பது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது இல்லை. ரவியுடன் மனம்விட்டு பேச முயற்சித்து, அதற்கான வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. ஆதாரமற்ற குற்றசாட்டுகள் எனது மனதை காயப்படுத்தி இருக்கின்றன" என ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் மனுதாக்கல்:
இதனால் ஜெயம் ரவி தனிப்பட்டு தனது பிரிவை அறிவித்துள்ள நிலையில், அவரின் மனைவி ஆர்த்திக்கு விவகாரத்தில் விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது. இருவருக்கும் எதிரான விவாகரத்து மனு, ஜெயம் ரவி தரப்பில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மனு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து குறித்து ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்தது நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்கமுழுக்க என் "கவனத்திற்கு வராமலும், என ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கெளரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாயப்பு தர மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு 'குழந்தைகளும் நிலை புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவ முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்தவை தானே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது அல்ல. GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறிதது கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என்னை குற்றம் சாட்டியும், என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனுடன், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை மறுப்பதும் என் முதல். கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டிவகும் பத்திரிக்கை, ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும்என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
விவாகரத்து குறித்து ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான பதில் அறிக்கை:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)