Rajisha Vijayan Marriage: கர்ணன் பட ஹீரோயினுக்கு திருமணமா?. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
மலையாள நடிகை ரெஜிஷா விஜயனின் ரகசிய காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிப்ரவரி 6, சென்னை (Chennai): பிரபல நடிகை ரஜிஷா விஜயனுக்கும், ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரெஜிஷா விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனுஷின் கர்ணன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி தாங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு காதலை உறுதி செய்துள்ளது. Bharat Rice: ஒரு கிலோ அரிசி ரூபாய் 29 மட்டுமே.. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் பாரத் அரிசி விற்பனை..!
இது குறித்து டோபின் தாமஸ் X தளத்தில், '1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளதால், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

