'Vaazhai' 2nd Single Release: 'ஒரு ஊருல ராஜா' பாடல்.. வாழை படத்தின் 2-வது பாடல் வெளியீடு..!
இன்று மாலை 5 மணிக்கு வாழை திரைப்படத்தின் 2-வது பாடலான 'ஒரு ஊருல ராஜா' பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 29, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வாழை' திரைப்படத்தின் (Vaazhai Movie) முதல் பாடல் கடந்த ஜூலை 18-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராம், பா ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். Sowndarya Amudhamozhi: செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி புற்றுநோயால் மரணம்; ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney + Hotstar), மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் குழு ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவீஸ் இந்த படத்தினை வாங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘வாழை’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடலின் சில வரிகளில்,
"காக்கா கத கேக்கும்போது யானை மூஞ்சு தெரியுது
யானைக் கத கேக்கும்போது பூனை சத்தம் கேக்குது
பூனைக் கத கேக்கும்போது தெருநாய் கொறைக்குது"
இந்த குறிப்பிட்ட பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், இப்படம் திரையரங்கில் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 29, 2024 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

