Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!

Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக அறியப்படும் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Joy Crizildaa: தாயானார் ஜாய் கிரிசில்டா.. பிறந்த அழகிய ஆண் குழந்தை.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்தையானதாக பதிவு.!
Joy Crizildaa Baby Boy (Photo Credit : @Instagram)

அக்டோபர் 31, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலை செய்து அடையாளம் பெற்று பின் நடிகரானார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், திரையுலகில் அடியெடுத்து வைத்த பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்:

இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. Bigg Boss 9 Wild Card: பிக் பாஸ் வைல்ட் கார்டில் பாக்கியலட்சுமி நடிகை.. இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது.!

சட்டப்படிப்பை தொடங்கிய ஜாய் கிரிசில்டா:

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டபடி இருந்தார். இதனால் நீதிமன்றத்தை நாடிய ரங்கராஜ், என்னைப்பற்றி பேசுவதற்கும், வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்ட நிலையில், மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜை தாக்கி ஜாய் கிரிசில்டா பதிவை போட தொடங்கினார். இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'Law Student' என சேர்த்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

ஜாய் கிரிசில்டாவுக்கு குழந்தை பிறந்தது:

அந்த மனுவில், தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதால் தனது மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) மற்றும் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).