Nithya Balaji - File Photo (Picture Credit WikiBio.in)

ஜனவரி 31: சென்னையில் உள்ள மாதவரம் (Madhavaram, Chennai) பகுதியில் வசித்து வரும் பிரபல நடிகர் தாடி பாலாஜியின் (Thadi Balaji) மனைவி நித்யா (Nithya), காரை சேதப்படுத்திவிட்டதாக மாதவரம் காவல் நிலையத்தில் (Madhavaram Police Station) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் காவல்நிலைய ஜாமீனில் பிணையில் வந்த நித்யா, நேற்று (ஜனவரி 30, 2023) சென்னை மாநகர காவல் ஆணையர் (Chennai City Police Commissioner) அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "எனது அண்டைவீட்டில் வசித்து வரும் நபர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வழக்கிற்கு ஆதாரமாக வீடியோ (CCTV Video) கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் நான் குறிப்பிட்ட இடத்தை கடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவ நாளில் நான் துணிவு திரைப்படம் (Thunivu Movie) பார்த்துவிட்டு தாமதமாக மகளுடன் வீட்டிற்கு வந்தேன். Prostitution on Virudhunagar: வீடு எடுத்து பலான தொழில்.. அதிமுக மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது.. உல்லாசத்தில் அழகியோடு சிக்கிய இளைஞர்.!

அப்போது, எனது சாவி கீழே விழுந்துவிட்டது. இதனால் செல்போனில் டார்ச் (Mobile Phone Torch) அடித்தவாறு அதனை தேடினேன். அந்த வீடியோவை வைத்து என் மீது புகார் அளித்துள்ளார். இதை வைத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இது எனது பக்கத்து வீட்டு சண்டை. இதைக்கூட எதற்கு பெரிதுபடுத்திக்கொள்கிறார்கள் என தெரியவில்லை. கடந்த 20 நாட்களாகவே அவர்களுக்கும் எங்களுக்கும் தகராறு நடந்து வந்தது. அவரின் மனைவி, மகள் என்னை அவதூறாக பேசினார்கள்.

Actor Thaadi Balaji With Wife Nithya & Daughter Poshika (Photo Credit: WikiBio.in)

என் திருமண வாழ்க்கை (Marriage Life) தொடர்பாகவும் அவதூறாக பேசினார்கள். எனது பள்ளிக்கூட போஸ்டர் கிழிக்கப்ட்டது. எனது பக்கத்து வீட்டில் வசிப்பவர் புகார் அளித்ததும் ஒருமணிநேரத்தில் வினோத் என்ற காவல் அதிகாரி விசாரணைக்கு நான் வரவில்லை என்றால் சாலையில் அனைவரும் பார்க்கும் அளவு கைது செய்து செல்வோம் என மிரட்டும் வகையில் கூறினார். நான் காவல் நிலையம் சென்றதும், உதவி ஆய்வாளர் (Sub Inspector) அதிகாரி ஆய்வாளர் (Inspector) வரும் வரை காவல் நிலையத்திற்கு வெளியே இருங்கள் என்றார். Thalapathi 67 Update: லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கைகோர்த்த தளபதி விஜய் – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

விசாரணையின் போது எனது தரப்பு நியாயத்தை கூறக்கூட விடவில்லை. அவர்களாக வழக்குப்பதிவு (Complaint) செய்துகொண்டார்கள். எனது திருமண வாழ்க்கை விவகாரத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வருகையில், எனக்கு பாதுகாவலராக காவலர் நியமனம் செய்யப்பட்டார். அவர் வாட்சை (Watch Bribery) இலஞ்சமாக கேட்டார். என் வாழ்க்கையில் இலஞ்சத்தால் நியாயம் காலதாமதமாகி வருகிறது. எங்களது குடியிருப்பு பகுதியில் காலை 4 மணிக்கே மதுபானம் கிடைக்கும்.

இவையெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று கூட எனக்கு தெரியாது. எங்களது ஏரியாவில் இவை காவல் மற்றும் கலால் அதிகாரிகளுக்கு தெரிந்த நடக்கிறது. தனியாக இருக்கும் பெண்ணுக்கு (Single Women / Single Parenting) எதிராக என்ன மாதிரியான முன் உதாரணத்தை இந்த சமூகம் வைக்கிறது?. நான் தனிப்பட்டு பல அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன். ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, தமிழிசை சௌந்தர்ராஜன் (J.Jayalalithaa, Mamata Banerjee, Tamilisai Soundararajan) ஆகியோரை நான் எனது முன் உதாரணமாக வைத்திருக்கிறேன்.

நான் ஒட்டுமொத்த காவல் துறையினரையும், ஆண்களையும் குறைசொல்லவில்லை. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விரைவில் பெண்களுக்காக போராட நான் பாரதிய ஜனதா கட்சியில் (Bharatiya Janata Party) இணையவிருக்கிறேன்" என்று பேசினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 31, 2023 09:49 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).