Tamil Movies Part 1 & 2: தமிழில் இரண்டு பாகமாக வெளியாகி மாபெரும் சாதனை படைத்த 5 படங்கள் என்னென்ன?.. அசத்தல் லிஸ்ட் இதோ.!
Template: Tamil Movies Part 2 Victory

டிசம்பர், 9: தமிழ் மொழியில் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் (Tamil Movies) வெளியாகின்றன. இவற்றில் பெரிய அளவிலான நடிகர்களின் நடிப்பில், கோடிகளின் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படங்கள் சொற்ப அளவிலான படங்களே நினைவில் நிற்கின்றன.

இவற்றில் அப்படத்தின் வசூல், படத்தின் நாயகர்கள், அதற்கான எதிர்பார்ப்பை பொறுத்து அவை நம் மனதிலும் நிற்கும். அந்த வகையில், திரையில் வெளியான பல படங்களில் இரண்டாம் பாகமும் (Tamil Movies Part 1 & Part 2) எடுக்கப்படுவது உண்டு. அவ்வாறாக திரையில் முதல் பாகம் வெளியாகி 2ம் பாகமும் அதே அளவிலான அல்லது அதற்கு மேல் வெற்றியை பெற்ற படங்களின் விபரங்கள் குறித்து இன்று காணலாம்.

எந்திரன் (Enthiran & Enthiran 2.0): ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகளவில் அமோக வெற்றி பெற்று வசூலையும், விமர்சனத்தையும் நல்ல முறையில் பெற்று குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எந்திரன் 2.0 கடந்த 2018ல் 3D தொழில்நுட்பத்துடன் வெளியானது. உலகளவில் ரூ.745 கோடி பணம் வசூல் செய்தது. அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் வெளியாகுவதற்கு முன்பு டாப் வசூல் பட்டியலில் இருந்த படத்தில் 2.0 முதல் இடத்தை தக்கவைத்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Enthiran & 2.0
Enthiran & 2.0

பாகுபலி (Bahubali 1 & Bahubali 2):

ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பாகுபலி 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015ம் வெளியானது. படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் எதற்காக நாயகன் பாகுபலியை கொலை செய்தார்? என்ற ஒற்றை சஸ்பென்ஸ்க்கு விடைகேட்டு 2 ஆண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு 2017ல் பாகுபலி 2 திரைப்படத்தின் மூலமாக விடை கிடைத்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. வசூலில் உலகளவில் ரூ.1,810 கோடி வசூலை அடைந்தது. #ViralVideo: வரட்டா மாமே.. பிரீ பயணத்திற்கு தயாரான புறாவுக்கு டாட்டா காண்பித்த விமானம்.. தூக்கிய பைலெட்டால் வழுக்கி ஓடிய புறா.! 

கே.ஜி.எப் (KGF Chapter 1 & KGF Chapter 2): கன்னட மொழியில் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கே.ஜி.எப். முதலில் கன்னட மொழியில் வெளியான கே.ஜி.எப்-க்கு கிடைத்த வரவேற்பினால் பின்னர் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்போது குறைந்த அளவிலான தியேட்டரில் வெளியானாலும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் பயங்கர வெற்றியை பெற்றது. அப்படத்திற்கு எதிராக விஜயின் பீஸ்ட்டும் களமிறங்கிய நிலையில், அது கலவையான விமர்சனம் பெற்று தோல்வி அடைந்ததால் கே.ஜி.எப் அமோக வெற்றி அடைந்தது.

KGF2
KGF Chapter-2

சென்னை 600028 (Chennai 600028 Part 1 & Part 2): கடந்த 2007ம் ஆண்டு ஜெய், பிரேம் ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், ஷிவா, விஜயலட்சுமி, விஜய் வசந்த் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சென்னை 600028. இப்படம் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி இளைஞர்களின் கனவு எண்ணத்தை பிரதிபலித்து எடுக்கப்பட்டது. இப்படம் அன்றைய நாட்களில் அமோக வெற்றி அடைந்தது. பின்னர், கடந்த 2016ல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜெய் திருமணம் தொடர்பாக காதல் - கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் வெளியான இப்படம் வெற்றி அடைந்தது. இப்படம் வெளியான நேரத்தில் சென்னையில் பெருவெள்ளம், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் என பல பிரச்சனைகள் சூழ்ந்து இருந்தாலும் படம் வெற்றியை அடைந்தது.

காஞ்சனா (Kanchana 1 & Kanchana 2): கடந்த 2007ல் ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், கோவை சரளா, வினு சக்கரவர்த்தி, காதல் தண்டபாணி உட்பட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் முனி. இப்படத்தை ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கியிருந்தார். இப்படம் திரில் கொண்ட பேய் படமாக அன்றைய நாட்களில் வெளியாகி பலரையும் பதறவைத்தது. அமோக வெற்றியும் அடைந்தது. அதனைத்தொடர்ந்து, கடந்த 2011ல் அதே பாணியில் திருநங்கையின் வலியை உணர்த்தும் பொருட்டு காஞ்சனா திரைப்படம் வெளியானது. இது முனி படத்தின் 2ம் பாகம் ஆகும். இப்படத்தில் நடிகர் சரத் குமார் திருநங்கை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் மக்களால் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியை அடைந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 08:06 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).