Priyanka Deshpande Controversy: பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்.. புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா குறித்து, பயில்வான் ரங்கநாதன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Priyanka Deshpande Controversy: பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்.. புயலை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
Priyanka Deshpande (Photo Credit: @Instagram)

செப்டம்பர் 17, சென்னை (Television News): தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற வருகிறது. 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணம் குக்காக வந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா (Priyanka) தனது வேலையில் தலையிட்டதால் வெளியேறியதாக கூறியதை அடுத்து, இவர்கள் இவருவரின் சண்டை பெரும் பேசுபொருளாகி உள்ளது.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதன் (Ranganathan), அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இதை சீரியசாக நாம பார்க்கக்கூடாது. பார்த்து சிரித்துவிட்டு போய் கொண்டே இருக்க வேண்டும். எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சண்டையை பெண்கள் வாயை திறந்து பார்த்துக்கொண்டு இருந்தார்களோ அதேப்போல, இரண்டு பொம்பள சண்டையை அனைவரும் என்னனு பார்க்கிறார்கள். இதனால், அந்த டிவி தான் பிரபலமாகிக்கொண்டு இருக்கிறது. இது அந்த தொலைக்காட்சியின் பப்ளிசிட்டி ஸ்டெண்ட். Cooku With Comali 5 Controversy: மணிமேகலை vs பிரியங்கா.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை..!

மணிமேகலை இது குறித்து நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் கண்டுக்கொள்ளவில்லை. பிரியங்காவும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சம்பளத்தை வாங்கிக்கொண்டு விமானத்தில் ஜாலியா பறந்துவிட்டார். இதில் மணிமேகலைக்குத்தான் அவமானம். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வாழ்க்கையை ஆரம்பித்த பிரியங்கா, அடுத்தடுத்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி விட்டார். அதே டிவியில் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

இப்போது, பிரியங்காவின் முன்னாள் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், இப்போதும், பிரியங்கா சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு சுற்றி வருகிறார். அனைவரும் சொல்வது போல, பிரியங்கா அனைவரிடமும் அன்பாக பேசி அவரை அன்புக்கு அடிமையாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார். நான் அவரை இரண்டு மூன்று நிகழ்ச்சியில் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் கன்னத்தை கிள்ளி, இரட்டை அர்த்தத்தில் பேசி சேட்டை செய்வார். அப்போதே நாம் உஷாராகி, அதற்கு சரியான கவுன்டர் கொடுத்துவிட்டால், மீண்டும் நம்ம பக்கமே வர மாட்டார். ஆனால், மக்களை எப்படியாவது தன்வசப்படுத்த வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).