Bigg Boss Tamil Season 8: குக் வித் கோமாளியில் மணிமேகலை விலகலுக்கு என்ன காரணம்? பிக் பாஸ் வீட்டிற்குள் உண்மையை உடைத்த போட்டியாளர்.!
மணிமேகலை - பிரியங்கா இருவருக்குள்ளும் ஈகோ வெடித்து கிளம்பிய நிலையில், விஜய் டிவி பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
அக்டோபர் 30, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர்.
முக்கியப்புள்ளிகள் வெளியேற்றப்பட்டனர்:
முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வார எவிக்ஷனில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து போன வாரம் தர்ஷா குப்தா வெளியேறினார். இந்த சீசனுக்கு வரப்போகும் வைல்ட் கார்டு போட்டியாளர் (wild card contestant) பற்றிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. Salman Khan Death Threat: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. பாலிவுட் திரையுலகமே பரபரப்பு.!
மணிமேகலை - பிரியங்கா:
இந்த நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜே விஷால், சாச்சனா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் இணைந்து பிரியங்கா - மணிமேகலை சர்ச்சை குறித்து பேசியுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் பங்கேற்பாளர் பிரியங்காவிற்கும் இடையே மோதல் வெடித்து சோசியல் மீடியா வரை சென்றது. பலரும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர் விஷால் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
அவர் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும். அதை அவர் வெளியில் சொன்னால், அது வேறு விதமாக மாறிவிடும். எனவே இது தேவையில்லாத ஒன்று. இப்போது இங்கு கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் இருக்கிறோம். அதில் நமக்குள் 1000 பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது. மக்களை எப்படி என்டர்டெயின்மென்ட் செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். அது போல தான் மணிமேகலையும் அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களை வெளியே சொல்லியிருக்க கூடாது. அவர் சொல்லிவிட்டார் ஆனால் பிரியங்கா அதை கண்டு கொள்ளவில்லை. அது ரொம்ப நல்ல விஷயம். மணிமேகலை இதை பற்றி பேசியிருக்க கூடாது என்று பின்னாளில் யோசிப்பார்“ என்றார்.
வைரலாகும் விஷால் வீடியோ: