
பிப்ரவரி 24, போபால் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம், சிவபுரியில் (Shivpuri) 16 வயது சிறுவன், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (பிப்ரவரி 22) தினாரா காவல்நிலைய எல்லைக்குள் நடந்தது. சிறுமி தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் மயக்க நிலையில் கிடந்தார். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 முறை கத்தியால் தந்தையை குத்திக்கொன்ற மகன்.. ஈவு-இரக்கமின்றி நடுரோட்டில் பயங்கரம்.!
சிறுமி பலாத்காரம்:
இதுகுறித்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 16 வயது சிறுவன் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார். அங்கு அவன் அதிகமாக குடித்துவிட்டு போதையில் இருந்த சிறுவன், சிறுமியை ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தேடத் தொடங்கினர். தற்போது, காவல்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து, குற்றம் சாட்டப்பட்டவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3