ஆகஸ்ட் 18, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் நேற்று (ஆகஸ்ட் 17) மாலை 6.30 மணியளவில், வீட்டை விட்டு வெளியே கடைக்கு சென்ற சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. டியூஷன் ஆசிரியர் போக்சோவில் கைது..!
3 பேர் கைது:
புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இன்று காலை 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் அதே காலனியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மீதமுள்ள இருவர் அருகிலுள்ள காலனியைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் பாமு கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3