Minor Girl Rape: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கொடூரம்..!

உத்தர பிரதேசத்தில் உறவினரான சிறுமி ஒருவரை 21 வயது வாலிபர் பலாத்காரம் செய்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Rape: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கொடூரம்..!
Teenager Arrested In UP (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 06, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் தீபக் குமார் (வயது 21). இவர் கடந்த மார்ச் மாதம் புலந்த்ஷாஹரில் இருந்து காஜியாபாத்திற்கு (Bulandshahr To Ghaziabad)தனது உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு தனது தாய்மாமன் வீட்டில் இரவு தங்கியுள்ளார். அவர் தனது தாய்மாமனின் 14 வயது மகளை, அன்றிரவு பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். Man Helps His Wife To Marry Her Boyfriend: மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவர்.. ஊரார் முன்னிலையில் திருமணம்..!

இதனையடுத்து, சிறுமி 4 மாதம் கர்ப்பமானார். கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவர் அரசு மருத்துவமனையில் பெற்றோருடன் சென்று கருக்கலைப்பு செய்தார். பின்னர், மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிறுமியின் உறவினரான தீபக் குமார் தான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. அவர் மீது போக்சோ வழக்குப்பதிந்து அவரை கடந்த ஆகஸ்ட் 04-ஆம் தேதி அன்று காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).