MBBS Student Suicide: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
புனேவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் 2ஆம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை (Medical Student Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 07, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனேவில் (Pune) உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கிருஷ்ணகுமார் மீனா (வயது 21) என்ற இளம்பெண், இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை, விடுதியில் உடன் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவிகள், மாணவியின் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் வெகு நேரமாகியும் வெளியே வராததைக் கண்டு சந்தேகமடைந்தனர். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், அவர் பதிலளிக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவிகள், காவல்துறையினருக்கு புகார் அளிக்க முயன்றனர். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. மருமகனை அடித்துக் கொன்ற மாமியார்..!
மாணவி தற்கொலை:
இதனிடையே, விடுதியின் மற்றொரு அறையில் அந்த மாணவி தூக்கில் தொங்கிக் (Hanging Suicide) கொண்டிருந்ததைக் கண்ட மற்ற மாணவிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக, விடுதி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை கடிதம்:
இதனையடுத்து, மாணவியின் அறையைச் சோதனையிட்டபோது, அவர் எழுதியிருந்த ஒரு தற்கொலைக் கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், 'தான் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும்' குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பான தகவல்களை காவல்துறையினர் மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.
(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

