Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

தெலுங்கானாவில் தெருநாய் கடித்த 4 சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Stray Dog (Photo Credit: @TOIHyderabad)

ஆகஸ்ட் 10, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை (Siddipet) மாவட்டத்தில் உள்ள ராய்போல் கிராமத்தில் கடந்த மாதம் தெருநாய் (Dog Bite) கடித்ததில், காயமடைந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 08) பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்த சிறுவன், காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Woman Killed By Cat Bite: பூனை கடித்து 50 வயது பெண்மணி பரிதாப பலி; காரணம் என்ன?.. அலட்சியம் வேண்டாம்..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இப்ராஹிம்பட்டினம் காவல்துறையினர், சிறுவன் நாய்க்கடியால் இறந்தாரா அல்லது வெறிநாய்க்கடியால் இறந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​தெருநாய் கடித்ததாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 10, 2024 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).