
பிப்ரவரி 18, மலப்புரம் (Kerala News): கேரள மாநிலம், மலப்புரம் (Malappuram) மாவட்டத்தில் திரூர் அருகேயுள்ள தெற்கு அண்ணார பாகம் பகுதியில் வசித்து வருபவர் முகமது நிஷால் (வயது 25). பிரபல யூடியூபரான இவருக்கு, எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்துள்ளனர். Road Accident: நின்று கொண்டிருந்த வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி..!
இளம்பெண் பாலியல் பலாத்காரம்:
இந்நிலையில், இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தனியாக வரவழைத்து ஆபாச புகைப்படம் எடுத்துள்ளார். இதன்பின்னர், ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண்ணை முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இளம்பெண்ணை மிரட்டி முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், யூடியூபர் முகமது நிஷாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3