கைவைத்த இளைஞர்.. கன்னம் பழுக்க பளார் விட்டு அதிரடி காட்டிய இளம்பெண்.. சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!

மாடிப்படியில் ஒதுங்கி நின்ற தனது மீது நபர் ஒருவர் கைவைக்க வந்ததால் ஆத்திரமடைந்த பெண்மணி கன்னத்தில் பளார் விட்டு மாஸ் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

கைவைத்த இளைஞர்.. கன்னம் பழுக்க பளார் விட்டு அதிரடி காட்டிய இளம்பெண்.. சிங்கப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு.!

ஏப்ரல் 27, லக்னோ (Today Trending News in Tamil): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ உலகளவில் பிரபலமாகிவிட்டது. பலரும் தங்களின் அன்றாட செயல்பாடுகளை இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து பதிவு செய்து இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நபர்களாகவும் மாறியுள்ளனர். ஆனால், என்னதான் தொழில்நுட்பத்தின் அறிமுகம் பல புதிய விஷயங்களை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவினாலும், ஒருசில விஷயங்களில் சில நபர்களின் மனஓட்டம் என்பது மாறாமல் இருக்கிறது. அந்நிலை விரைந்து மாற வேண்டும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. அதாவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமான பெண்மணி ஒருவர் தனது வீட்டின் மாடிப்படியில் நின்றபடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக இளைஞர் வந்ததால் பெண் ஒதுங்கி நின்றார். இளைஞரோ பெண்ணை பார்த்து திடீரென அவரின் உடல் அங்கத்தை தொடுவது போல வந்தார். Rajinikanth: தலைவர் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. விமான பயணத்தில் இன்ப அதிர்ச்சி.! 

பெண்ணின் அதிரடி செயல்:

இதனால் பெண்மணி விலகினாலும், ஆத்திரமடைந்தவர் இளைஞரின் கையைப்பிடித்து என்ன செய்தாய் என கேட்டார். அப்போது, பதில் சொல்ல இயலாமல் திணறிய இளைஞருக்கு பெண் பளார் விட்டார். இதனால் சாரி., சாரி என்றவாறு இளைஞர் அங்கிருந்து சென்றார். உடனடியாக பெண்ணும் வீடியோ ஆதாரத்துடன் இளைஞரின் வீட்டுக்கு சென்று அவரின் நடத்தை குறித்து புகார் அளித்தார். இளைஞரின் பெற்றோரோ மகனை கண்டிக்காமல், அவருக்கு சிறிய மனநல பாதிப்பு உள்ளது. இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறி இருக்கின்றனர். இதனால் ஆவேசமடைந்த பெண் எந்த விஷயத்தில் மனநல பாதிப்பு உள்ளது. அனைத்தையும் இயல்பாக பாவிக்க கற்றுக்கொடுங்கள். உங்களிடமும் அப்படிதான் நடக்கிறாரா? என வாதம் செய்தபடி புறப்பட்டு வந்துள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருக்கிறார். இதுதொடர்பான சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இளைஞருக்கு எதிராக பளார் விட்டதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல, வடமாநிலந்தில் பெண் உடுத்தியுள்ள உடை இயல்பான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் கன்னத்தில் பளார் விட்டு அதிரடி காட்டிய காணொளி:

சம்பவத்துக்கு பின் பெண் பதிவிட்ட வீடியோ:

(The above story first appeared on LatestLY on Apr 27, 2025 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).