ஆகஸ்ட் 23, வாரணாசி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி, பகவான்பூர், கேதர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் ஜா (வயது 48). இவர் அங்குள்ள சன்பீம் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆதர்ஷ் சிங். இவருக்கும், ஆசிரியர் தரப்புக்கும் இடையே வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பான விவகாரத்தில் முன்விரோதம் (Parking Dispute) இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
பார்க்கிங் தகராறு கொலையில் முடிந்தது:
இந்நிலையில், நேற்று கார் நிறுத்தும் விஷயத்தில் இருதரப்பு இடையே வாக்குவாதம் உண்டாகிய நிலையில், ஆதர்ஷ் சிங் தனது நண்பர்கள் இரண்டு பேருக்கு போனில் தொடர்பு கொண்டு இருக்கிறார். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ஆசிரியர் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மூவரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், பார்க்கிங் தகராறு காரணமாக ஆசிரியரை கற்கள் கொண்டு தலையில் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதனாலேயே அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்தது. கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!
பார்க்கிங் படம் நினைவிருக்கா?
கடந்த 2023ம் ஆண்டு நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன், இளவரசு உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் பார்க்கிங். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வழங்கி இருந்தார். பார்க்கிங் விஷயத்தில் இருவருக்கு இடையே நடைபெறும் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகியிருந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. மேலும், தேசிய விருதையும் பெற்றுள்ளது. இப்படத்தைப்போல பல பார்க்கிங் பஞ்சாயத்துகள் வடமாநிலங்களில் அதிகம் நடக்கின்றன. இதனால் கொலையும் நடைபெறுகிறது. சென்னையிலும் அவ்வப்போது சில குற்றங்கள் பார்க்கிங் பிரச்சனையில் நிகழ்கிறது.