
மே 21, சஹாரன்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள வஹ்லானா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அனிதா (வயது 22). இவர், கடந்த ஒரு வருடமாக சஹாரன்பூரைச் (Saharanpur) சேர்ந்த விஷால் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். அனிதா, கர்ப்பிணியாக இருந்தார். 4 Year Old Boy Killed: மகனை கொடூரமாக கொலை செய்த தாய்.. கள்ளகாதலுக்காக நடந்த கொடுமை.!
இளம்பெண் கொடூர கொலை:
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு, விஷால் தனது மனைவி அனிதாவுடன் வீட்டிற்கு வந்து காதல் திருமணம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தினர் மிகவும் கோபமடைந்தனர். இதன் காரணமாக வீட்டில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், விஷால் வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுள்ளார். விஷால் இல்லாத நேரத்தில், அவரது குடும்பத்தினர் அனிதாவைக் கொன்று (Murder), அவரது உடலை காட்டில் வீசியுள்ளனர். விஷால் வீடு திரும்பி வந்தபோது, வீட்டில் அவரது மனைவியைக் காணவில்லை. வீட்டில் இரத்தக் கறைகள் இருப்பதை பார்த்த அவர், உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் விசாரணை:
தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், விஷாலின் குடும்பத்தினர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, விஷாலின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.