'மூக்கு மேல ராஜா' - ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடி பரிசு..!

உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர், ட்ரீம் 11 விளையாட்டில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடியை வென்றார்.

'மூக்கு மேல ராஜா' - ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடி பரிசு..!
Dream 11 Winner in UP (Photo Credit: @SachinGuptaUP X)

மே 05, கௌசாம்பி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி (Kaushambi) மாவட்டத்தில் உள்ள காசி ராம் கா பூர்வா கிராமத்தைச் சேர்ந்த மங்கள் சரோஜ், ட்ரீம் 11 (Dream 11) விளையாட்டில் ரூ.39 முதலீடு செய்து ரூ.4 கோடியை வென்றுள்ளார். மங்கள் சரோஜின் தந்தை ஒரு ஏழை விவசாயி. வறுமையால் அவதிப்பட்ட இவரது குடும்பம், இந்த வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. சக மாணவர் வெறிச்செயல்.., விசாரணையில் வெளிவந்த உண்மை..!

ரூ.4 கோடி பரிசு:

இதுகுறித்து அவர் கூறுகையில், மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து ட்ரீம் 11 விளையாடி வருவதாக தெரிவித்தார். அவர் ஒவ்வொரு முறையும் ரூ.49 பந்தயம் கட்டி, ஒவ்வொரு முறையும் தோற்றுவிடுவார். ஆனால், இம்முறை அவர் கணக்கில் ரூ.39 மட்டுமே இருந்தது. ஆனாலும் அவர் விளையாடினார், நடந்து முடிந்த சென்னைக்கும் பஞ்சாப்புக்கும் இடையிலான போட்டியில், அவர் உருவாக்கிய ட்ரீம் 11 அணி வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.4 கோடி கிடைத்தது.

மறைந்திருக்கும் ஆபத்து:

இதன் மூலம், நாட்டில் உள்ள பல இளைஞர்கள், நாமும் ட்ரீம் 11 விளையாட வேண்டும். நாமும் முயற்சி செய்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், மங்கள் 77 முறை தோற்றார் என்பதை யாரும் கருத மாட்டார்கள். தொடர்ந்து, விளையாடி வருவதால், இதற்கு அடிமையாகலாம். மேலும், பண இழப்பு அபாயம் ஏற்படும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி, ஆன்லைன் ரம்மி போன்றவைக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on May 05, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).