Kolkata Woman Gang Rape Case (Photo Credit: @OrissaPOSTLive X)

செப்டம்பர் 08, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது பிறந்தநாளில், தனது இரு நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 05ஆம் தேதி வெள்ளிக்கிழமை நகரின் தெற்கு புறநகரில் உள்ள ரீஜண்ட் பார்க் பகுதியில் நடந்துள்ளது. பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை:

இதுகுறித்த விசாரணையில், ஹரிதேவ்பூரைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக நண்பர்களான சந்தன் மாலிக் மற்றும் தீப்பின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கதவைப் பூட்டிவிட்டு, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். மறுநாள் காலை 10.30 மணியளவில் தான் அவர் அங்கிருந்து தப்பித்து, வீடு திரும்பிய பிறகு, அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

இளம்பெண் வாக்குமூலம்:

பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில், பல மாதங்களுக்கு முன்பு, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய துர்கா பூஜை குழுவின் தலைவராக சந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மூலம், தீப் உடனான அறிமுகம் தனக்கு ஏற்பட்டது. இதன்பின்னரே, நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தோம் என கூறினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான சந்தன் மாலிக் மற்றும் தீப் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3