9-Year-Old Girl Rape: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. முதியவர் போக்சோவில் கைது..!
பஞ்சாப்பில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 27, அமிர்தசரஸ் (Punjab News): பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் (Amritsar) 9 வயது சிறுமியை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி அன்று, ஃபதேகர் சூரியன் சாலையில் உள்ள பாபா தீப் சிங் காலனியில் வீட்டில் இருந்த சிறுமி அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். பின்னர், இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செய்தி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; குற்றவாளியும் தற்கொலை.. காரணம் என்ன?!
இதனையடுத்து, உள்ளூர் மக்கள் ஒன்றாக திரண்டு வந்து, சோட்டு லால் என்ற முதியவரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு, போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 27, 2024 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

