நவம்பர் 08, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், அப்பன்னபாலத்தில் வசித்து வருபவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 66). இவரது மகன் சுப்பிரமணிய ஷர்மா. இவருக்கு லலிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தைகளும் இருக்கின்றன. ஜெயந்தி தனது மகனுடன் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது தனது மருமகளை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முதலில் பொறுத்துக் கொண்ட லலிதா ஒரு கட்டத்தில் மாமியார் மீது கோபமடைந்துள்ளார். இதனால் மாமியாரை பழி தீர்க்க வேண்டும் என முடிவு செய்ததாக தெரியவருகிறது.
கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருமகள்:
அதன்படி வாட்டர் கேனில் பெட்ரோலை வாங்கி வீட்டில் மறைத்தும் வைத்துள்ளார். லலிதாவின் திட்டத்தின் படி நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்ற பின் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து மாமியாரிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாமியாரை கயிற்றால் கட்ட முயலவே, அவர் எதற்காக? என கேட்டபோது விளையாட்டுக்காக என தெரிவித்து கண்ணையும் கட்டியுள்ளார். இதனால் பதறிய மாமியார் என்னை விட்டுவிடு என அலறித் துடித்துள்ளார். மாமியாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து விடுவார்கள் என எண்ணிய லலிதா உடனடியாக மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாமியார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். Stray Dogs: பேருந்து, இரயில் நிலையங்களில் இருந்து தெருநாய்களை அகற்ற வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு.!
உடல் கருகி பறிபோன உயிர்:
உடல் முழுவதும் தீ பரவி ஜெயந்தி கதறிய நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார். இதன் பின்னர் கணவருக்கு தொடர்பு கொண்ட லலிதா, மாமியாரின் உடலில் தீ பற்றி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போது லலிதா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மருமகளின் ஸ்கெட்ச்:
அப்போது மாமியார் துன்புறுத்தியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு பெற்றோர் ஊற்றி எரித்ததாக லலிதா தெரிவித்துள்ளார். லலிதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.