Young Woman Dies By Suicide: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு; இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..!
பெங்களூருவில் தனது கணவர் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 30, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூரு பேடரஹள்ளி அருகே ஆந்திரஹள்ளி பகுதியை சேர்ந்த தம்பதி திலீப் (வயது 30)-மானசா (வயது 25). இத்தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக திலீப் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது அவரது மனைவிக்கு தெரியவந்தது. Landslide In Kerala: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; இதுவரை 43 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..!
இதனை கைவிடுமாறு அவரது மனைவி மானசா பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், திலீப் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மானசா வீட்டின் அறைக்கு சென்று, முன்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதை செல்போன் மூலம் சமூக வலைதளத்தில் நேரலையில் வெளியிட்டுள்ளார்.
இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் பேடரஹள்ளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். பின்னர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

