மரண பயத்தில் அலறிய குழந்தைகள்.. "நாங்கள் இந்திய இராணுவம்.. உங்களை பாதுகாக்க வந்துள்ளோம்" ஆஸ்வாசப்படுத்திய அதிகாரிகள்..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பி வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தியா ராணுவத்தை பார்த்து பயந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மரண பயத்தில் அலறிய குழந்தைகள்..
Pahalgam Terror Attack (Photo Credit: @SachinGuptaUP X)

ஏப்ரல் 23, பஹல்கம் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்கம் (Pahalgam Terror Attack) பகுதியில் நேற்று (ஏப்ரல் 22) வெவ்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 இத்தாலி, இஸ்ரேல் நாட்டவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பல வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஸ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. Pahalgam Terrorist Attack: பஹல்கம் தாக்குதல்.. அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை.. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்?

தைரியப்படுத்திய ராணுவ வீரர்:

பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் பஹல்காம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது, ​​இந்திய ராணுவத்தைப் பார்த்து ஒரு பெண் பயந்தார். சுற்றுலாப் பயணியான அப்பெண், "என் குழந்தையைக் கொல்லாதே" என்றார். அப்போது, ராணுவ வீரர் ஒருவர், "பயப்படாதே, நாங்கள் வீரர்கள், உங்கள் பாதுகாப்புக்காக வந்திருக்கிறோம், நாங்கள் இந்திய இராணுவம், உட்காருங்கள்" என தைரியப்படுத்தினார்.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).