Guwahati Suicide: அந்தரங்க போட்டோ, விடியோவை வெளியிட்ட காதலன்; மனமுடைந்து தூக்கில் தொங்கிய காதலி.!

அன்பு காதலனின் செயல்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிய காதலியின் மீது வெறுப்பு கொண்ட காதலன், அவருடன் தனிமையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டதால் பெண்மணி விபரீத முடிவெடுத்த சோகம் நடந்துள்ளது.

Guwahati Suicide: அந்தரங்க போட்டோ, விடியோவை வெளியிட்ட காதலன்; மனமுடைந்து தூக்கில் தொங்கிய காதலி.!
Death File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 04, கவுகாத்தி (Guwahati News): அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் அமித் மேதி. இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்மணியை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெண்மணிக்கு திடீரென காதலனின் மீது விரக்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. Chennai Shocker: சிறுமியை 11 பேர் கும்பல் பலாத்காரம் செய்த விவகாரம்; வாட்சப் குழுவில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.. பகீர் சம்பவம்.!

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமித் மேதி, தனது காதலியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்த காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன பெண்மணி விபரீத முடிவெடுத்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் பெண்ணின் சடலத்துடன் கடிதத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர்.

பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவே, விசாரணை நடந்து வருகிறது. காதலரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 04, 2023 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).