Teenager Suicide in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 03, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் (Kanpur) அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பல்பீர் சிங் (வயது 23). இவர், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து (Love Affair) வந்துள்ளார். இருவரும் திருமண செய்துகொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. இன்ஸ்டாகிராம் பழக்கம்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமிகள்.., அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை:

இதனையடுத்து, அவர்கள் பைக்கில் செல்லும் வழியில், ஒரு காட்டில் பைக்கை நிறுத்தினார்கள். பின், இருவரும் சேர்ந்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தனர். தொடர்ந்து, காதலன் பல்பீர் சிங் தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். ஆனால், காதலி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளம்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்பீரின் குடும்பத்தினர் இளம்பெண் தான் தனது மகனை கொலை செய்தார் என குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.