
பிப்ரவரி 13, ஃபரிதாபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தை (Faridabad) சேர்ந்தவர் 56 வயது பெண். இவர், அங்குள்ள அடுக்கமாடி குடியிருப்புகளில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 09ஆம் தேதி பணிமுடிந்து வீட்டிற்கு செல்வதற்காக மாலை 6 மணியளவில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பேருந்தில் எறியுள்ளார். பேருந்தில் ஏறியதும், பேருந்தில் இருந்த ஒரே பயணி தான் என்பதை உணர்ந்தார். Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
பெண் பாலியல் பலாத்காரம்:
இதனையடுத்து, ஓட்டுநர் பேருந்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தியுள்ளார். பின், நடத்துனர் பேருந்தின் ஜன்னல்களை மூடியுள்ளார். பேருந்து ஓட்டுநர், அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து, வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால் மிகுந்த மன வேதனையடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், அருகிலுள்ள குருகிராமில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல இந்தப் பேருந்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இருவர் கைது:
விசாரணையில், ஜெய்ப்பூரில் உள்ள பனியாலா கிராமத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ரோஷன் லால் (வயது 35) மற்றும் உத்தரபிரதேசத்தின் படாவுனில் உள்ள ஹர்தத்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த நடத்துனர் நான்ஹே ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 56 வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனியார் பேருந்தில், அதன் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3