Father Kills Daughter: மகள் இரும்பு கம்பியால் அடித்து கொடூர கொலை.. தந்தை தற்கொலை முயற்சி..!
உத்தர பிரதேசத்தில் மகளை இரும்புக் கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 06, சம்பல் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சம்பல் (Sambhal) மாவட்டத்தில் உள்ள அஷ்ரஃப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு அன்ஷு (வயது 19) என்ற மகள் இருந்தார். தனது மகள், வேறொரு நபருடன் உறவு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ராஜ்பாலுக்கு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவ நாளன்று தனது மகளை இரும்பு கம்பியால் அடித்து ராஜ்பால் கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். Student Dies By Suicide: தலைமை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் விவரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
மகளை கொன்று தற்கொலை முயற்சி:
இதனையடுத்து, ராஜ்பால் விஷம் குடித்து தற்கொலைக்கு (Suicide Attempt) முயன்றுள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். மேலும், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அன்ஷுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

