குடும்ப தகராறில் வீட்டுக்கு தீ வைப்பு.. தன்வினை தன்னைச் சுட்ட கதையாக குடும்பத்தலைவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்.!

கேரளாவில் குடும்ப தகராறில் வீட்டுக்கு தீ வைத்த பிறகு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் வீட்டுக்கு தீ வைப்பு.. தன்வினை தன்னைச் சுட்ட கதையாக குடும்பத்தலைவருக்கு நேர்ந்த சோகம்.. பறிபோன உயிர்.!
Hanging | Death File Pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 21, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், கொல்லம் (Kollam) அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 56). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான இவர், போதையில் தினமும் தனது மனைவி, மகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். Heart Attack: உடற்பயிற்சி செய்த வாலிபர் மாரடைப்பால் பலி.. சோக சம்பவம்..!

கணவர் தற்கொலை:

இதனைத்தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 20) இரவு சுமார் 11 மணியளவில் வழக்கம்போல வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மீண்டும் தனது மனைவி, மகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், திடீரென காஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்தார். தீ பிடித்ததும் வினோத்தின் மனைவியும், மகளும் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதனால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனிடையே, வினோத் வீட்டிற்குள்ளே தூக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். காஸ் சிலிண்டர் வெடித்து, வீட்டின் மேற்பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).