13 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை 5 மாத கர்ப்பம்..!
ஆசிரியையுடன் மாணவர் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான் 5 மாத கர்ப்பமாக இருப்பதால் 13 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்தேன் என ஆசிரியை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மே 02, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்மணி தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவர் கடந்த ஓராண்டாக டியூசன் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக திடீரென சிறுவன் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மாயமான மகனை கண்டறிந்து தரக்கூறி சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Anbil Mahesh: பெற்றோர்களே இதை செய்யாதீங்க - அமைச்சர் அன்பில் மகேஷ்.!
இருவரும் மாயமானது உறுதி:
அப்போது, சிறுவனுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்த ஆசிரியையும் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சந்தேகம் எழுந்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஆசிரியையுடன் மாணவரும் நடந்து சென்றது தெரியவந்தது. இதனால் இருவரையும் அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், 4 நாட்களுக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியையிடம் இது குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
கர்ப்பமானதால் ஓடினோம் - ஆசிரியை பதில்:
அதாவது, டியூசன் படிக்க வந்த 13 வயது சிறுவனிடம் மனம்விட்டு பேசிய 23 வயது ஆசிரியை, பின்னாளில் சிறுவனிடம் நெருங்கி பழகி இருக்கிறார். இவ்வாறாக ஓராண்டு காலம் இவர்களின் வாழ்க்கை நீடித்ததாக தெரியவரும் நிலையில், தற்போது ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வெளியே விஷயம் தெரிந்தால் என்ன செய்வது என்பது தெரியாமல் சிறுவனை அழைத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இந்த விஷயத்தில் உண்மை உள்ளதா? என்பதை சோதிக்க காவல்துறையினர் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(The above story first appeared on LatestLY on May 02, 2025 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

