கணவரின் கழுத்தறுத்து கொலை.. பெண் யூடியூபர் - இன்ஸ்டா பிரபலம் பழக்கத்தில் மலர்ந்த காதலால் விபரீதம்.!

யூடியூப் பிரபலமாக இருந்த பெண்மணி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த நபருடன் கள்ளக்காதல் வயப்பட்டு தனது கணவரை கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கணவரின் கழுத்தறுத்து கொலை.. பெண் யூடியூபர் - இன்ஸ்டா பிரபலம் பழக்கத்தில் மலர்ந்த காதலால் விபரீதம்.!
Accused Suresh & Ravina (Photo Credit: @TeluguSribe X)

ஏப்ரல் 16, ஹிவாணி (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிவாணி பகுதியைச் சேர்ந்தவர் ரவீனா (வயது 35). இவரின் கணவர் பிரவீன் (வயது 35). தம்பதிகளுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரின் அன்புக்கு அடையாளமாக முகுல் என்ற 6 வயதுடைய மகன் இருக்கிறார். இதனிடையே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட ரவீனா யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பதிவிட்டு வந்துள்ளார். இதன் வாயிலாக அவர் உள்ளூரில் இன்ஸ்ட்டா & யூடியூப் பிரபலமாகவும் வலம் வந்திருக்கிறார். இதனிடையே, ரவீணாவுக்கு அங்குள்ள ஹிஸார் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சுரேஷ் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தந்தையின் உடலைக்கண்டு கதறியழுத சிறுமி; மனதை உலுக்கும் காட்சிகள்..! 

Ravina Rao Instagram ID & CCTV Footage Clip (Photo Credit: @TeluguScribe X)
Ravina Rao Instagram ID & CCTV Footage Clip (Photo Credit: @TeluguScribe X)

கள்ளக்காதலுக்காக பயங்கரம்:

நட்பு ரீதியாக தொடங்கிய பழக்கம் பின்னாளில் கள்ளக்காதல் உறவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விஷயம் ஒருகட்டத்தில் ப்ரவீனுக்கு தெரியவந்து அவர் கண்டித்துள்ளார். இதனால் பிரவீனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்மணி, உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசியுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் ஜோடியின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். kallakathalukaga சுரேஷ் மற்றும் ரவீனா சேர்ந்து பிரவீனின் கழுத்தை அறுத்துக்கொன்றது விசாரணையில் அம்பலமானது.

பெண்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவில் கர்மாவை நம்புகிறேன். தனியாக பிள்ளையை வளர்க்கும் தாய். யூடியூபர். முகத்தைப் பார்த்து குணத்தை முடிவு செய்யாதே என எழுதி பஃயர் விட்டு இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 10:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).