Kolkata Hotel Fire Accident: கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் 14 பேர் பலி.. தமிழர்கள் 3 பேர் மரணம் உறுதி.. காலையிலேயே துயர செய்தி.!

சுற்றுலாவுக்குச் சென்ற குடும்பத்தினர் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழர்கள் சிக்கி உயிரிழந்த சோகம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் தமிழர்கள் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kolkata Hotel Fire Accident: கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் 14 பேர் பலி.. தமிழர்கள் 3 பேர் மரணம் உறுதி.. காலையிலேயே துயர செய்தி.!
Kolkata Fire Accident Tamil Family Dies (Photo Credit: YouTube / @PTI X)

ஏப்ரல் 30, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் தனியார் அடுக்குமாடி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. பல சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து இங்குள்ள அறையில் தங்கி இருந்தனர். இதனிடையே, நேற்று இரவில் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து (Kolkata Hotel Fire Accident News Tamil) ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற இயலாமல் தவித்துள்ளனர். சிலர் பால்கனி பகுதிக்கு வந்து உயிர்தப்பி இருக்கின்றனர். ஹோட்டல் அறையில் இருந்து வெளியேற இயலாமலும், சிலர் கரும்புகையில் சிக்கிக்கொண்டும் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் சுமார் 14 பேரின் உடலை சடலமாக மீட்டனர். இவர்களின் உடல் உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Tiruppur Accident: சாலை வளைவில் அதிவேகம்.. கல்லூரி மாணவர் துள்ளத்துடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

Kolkata Fire Accident (Photo Credit: @PTI_News X)
Kolkata Fire Accident (Photo Credit: @PTI_News X)

தமிழர்கள் மூவர் பலி உறுதி:

இந்நிலையில், கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (61), அவரின் பேரக்குழந்தைகள் தியா (10), ரிதன் (3) ஆகியோர் உயிரிழந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலாவுக்குச் சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களுடன் பயணித்த குடும்பத்தினர் 2 பேர் தீ விபத்தின் போது உணவு வாங்க வெளியே சென்றதாக தெரியவருகிறது. பின் இந்த சோகம் நடந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளி:

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).