
ஜூலை 01, நரசிங்பூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்சிங்பூர் மாவட்டத்தின் மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் சந்தியா சவுத்ரி (வயது 18). இவர் தற்போது நர்சிங் மாணவியாக பயின்று வரும் நிலையில், மாவட்ட மருத்துவமனையில் உதவியாளராகவும், உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சந்தியா வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அங்கு வந்த நிலையில், மாணவியை கடுமையாக தாக்கி இருக்கிறார். சூடான குழம்பில் விழுந்து 18 மாத குழந்தை துள்ளத்துடிக்க பலி.. அடுத்தடுத்து 2 குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்.!
மாணவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற இளைஞர் :
மேலும் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் என இருந்தும் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை. இதனிடையே திடீரென ஆவேசமடைந்த இளைஞர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பட்டப்பகலில் பல மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதை தொடர்ந்து விஷயம் வெளியே வந்துள்ளது. மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
போலீசார் விசாரணையில் பகீர் :
அவரது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடந்த விசாரணையில், மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் கருத்து வேறுபாடு நிலவி இருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், மீண்டும் தன்னிடம் பேசக்கூறி நடந்த வாக்குவாதத்தில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசம் நர்சிங் மாணவி கொலை தொடர்பான புகைப்படம்:
Horrific! Boyfriend Brutally Slits Throat Of Trainee Nurse In Narsinghpur Hospital; Disturbing Video Surfaceshttps://t.co/nvKSEY1eFo pic.twitter.com/SGnJa3dag0
— Free Press Madhya Pradesh (@FreePressMP) July 1, 2025