பொதுக்கழிவறையில் தங்கையை பலாத்காரம் செய்த சகோதரன்; வயிற்று வலியால் அம்பலமான உண்மை.!

தனது சகோதரனால் சிறுமி ஒருவர் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை புனேவை அதிரவைத்துள்ளது. சிறுமியின் உடல் நலப்பிரச்சனை காரணமாக அம்பலமான துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

பொதுக்கழிவறையில் தங்கையை பலாத்காரம் செய்த சகோதரன்; வயிற்று வலியால் அம்பலமான உண்மை.!
Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

மே 05, புனே (Maharashtra News): மஹராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், கோந்தவா பகுதியில் பதின்ம வயதுள்ள சிறுமி தனது சகோதரர் மற்றும் தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் சிறுமி அப்பகுதியில் உள்ள பொதுக்கழிவறைக்கு இயற்கை உபாதையை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை மறைமுகமாக பின்தொடர்ந்த சிறுமியின் சகோக்தரர், கழிவறைக்குள் தங்கை சென்றதும் திருட்டுத்தனமாக நுழைந்துள்ளார். அங்கு சிறுமியை பயியல் வன்கொடுமை செய்தவர், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவதாக மிரட்டி இருக்கிறார். வீட்டுக்கு வந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருக்க, அவரால் வயிற்று வலியையும் பொறுக்க முடியவில்லை. Cooku With Comali 6: குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் இடம்பெற்றது யார்? முழு விபரம் உள்ளே.! 

விசாரணையில் அம்பலமான உண்மை:

ஒருகட்டத்தில் வயிற்று வலி குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் கவனித்தபோது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, சிறுமி பயத்தில் உண்மையை கூற மறுத்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுமியின் சகோதரன் இழைத்த கொடுமை அம்பலமானது. இதனால் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் சகோதரரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on May 05, 2025 10:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).