
மார்ச் 02, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்ச்சல்-மல்கன்ச்கிரி (Medchal Malkajgiri) மாவட்டம், பேட் பஷீராபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரின் மனைவி சுகன்யா (வயது 35). தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சுகன்யா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட நிலையில், குழந்தைகளை கூட கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் நேரம் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனில் மூழ்கிக்கிடந்த சுகன்யாவுக்கு, 22 வயதுடைய கோபி என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சுகன்யா பேசி வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கள்ளகாதலருடன் பெண்மணி ஓட்டம் பிடித்தார். குழந்தை, கணவரை கைவிட்டு பெண் சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபருடன் வீட்டில் இருந்து வெளியேறி சென்றார். Maha Kumbh Mela 2025: 75 ஆயிரம் காவலர்களுக்கு போனஸ், பதக்கம், 7 நாள் விடுப்பு.. முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு..!
கையும் களவுமாக பிடித்தும் ஓடிய கள்ளக்காதல் ஜோடி:
இந்த தகவலை அறிந்த ஜெயராஜ், தனது மனைவியை கண்டறிந்து தர வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தலும், முன்னேற்றம் இல்லை. கள்ளக்காதல் ஜோடி தலைமறைவாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று ஜெயராஜ் எதற்ச்சையாக அங்குள்ள ஆக்சிஜன் பார்க் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருப்பதை நேரில் பார்த்துள்ளார். இருவரையும் கையும் களவுமாக ஜெயராஜ் பிடித்தாலும், அவரின் பிடியில் இருந்து தப்பிய ஜோடி, வழியில் வந்த பேருந்தை நிறுத்தி தப்பிச் சென்றது. மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த விஷயம் குறித்து ஜெயராஜ் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மனைவியை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மனைவியை விட்டு ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த மனைவி:
భర్త, ఇద్దరు పిల్లలను వదిలేసి సోషల్ మీడియాలో పరిచయమైన ప్రియుడితో పారిపోయిన వివాహిత
మేడ్చల్ జిల్లా పేట్ బాషీరాబాద్ పీయస్ పరిధిలో గతనెల 5న తన భార్య సుకన్య(35) కనిపించడం లేదంటూ మిస్సింగ్ కంప్లైంట్ ఇచ్చిన భర్త జయరాజ్
తన భర్త, ఇద్దరు పిల్లలను వదిలేసి సోషల్ మీడియాలో పరిచమైన… pic.twitter.com/e0oDcb0593
— Telugu Scribe (@TeluguScribe) March 1, 2025