Brother Killed his sister: சொந்த தங்கையை நடுரோட்டில் கொடூர கொலை செய்த அண்ணன்; காதலை கைவிடாததால் பகீர் சம்பவம்.!

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதலில் உறுதியாக இருந்த பெண், தனது சொந்த சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார்.

Brother Killed his sister: சொந்த தங்கையை நடுரோட்டில் கொடூர கொலை செய்த அண்ணன்; காதலை கைவிடாததால் பகீர் சம்பவம்.!
Meerut Sister Killed by Brother Murder Case (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 08, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹஸீன். இவரின் சகோதரி அம்ரிக்ஸ்ஷா. 19 வயது பெண்மணியான அம்ரிக்ஸ்ஷா, மோகித் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தவர் என்ற நிலையில், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. Teenager Beaten To Death: காதல் விவகாரம்; வாலிபர் சுத்தியலால் அடித்துக் கொடூர கொலை.. 2 பேர் கைது..! 

காதலில் உறுதியாக இருந்த பெண்:

தனது காதலில் உறுதியாக இருந்த அம்ரிக்ஸ்ஷா, 2 முறை காதலருடன் சென்றபோது குடும்பத்தினர் மீட்டு கொண்டு வந்துள்ளனர். அவர் தொடர்ந்து தனது காதலில் உறுதியாக இருந்த நிலையில், பெற்றோர் தரப்பில் வேறொரு நபருடன் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடந்தும் பலனில்லை. அம்ரிக்ஸ்ஷா தான் மோகித்தையே கரம்பிடிப்பேன் என கூறி இருக்கிறார். மோகித்தை தவிர வேறு யாரையும் கரம்பிடிக்க கூறினால் தற்கொலை செய்வேன் என மிரட்டவும் செய்துள்ளார்.

சொந்த சகோதரரால் கொடூர கொலை:

இதனால் சொந்த தங்கையின் மீது ஆத்திரம் கொண்ட ஹஸீன், அவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ஹஸீன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிடவே, காவல்துறையினர் தகவல் அறிந்து வந்து அம்ரிக்ஸ்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஹஸீனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).