ஏப்ரல் 07, முசாபர்நகர் (Uttar Pradesh News): சாலைகளில் பயணம் செய்யும்போது நமது பாதுகாப்புக்கு முதலில் நாம் வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது, சீட்பெல்ட் அணிந்து காரில் பயணிப்பது, உடல்நலக்குறைவுடன் அல்லது அலட்சியமாக வாகனத்தை இயக்காமல் இருப்பது நமது உயிருக்கும், பிறரின் உயிருக்கும் நல்லது. நமது சிறு அலட்சியமும் உயிரிழப்புக்கு வழிவகை செய்யும் என்பதை உணர்த்த பல்வேறு காணொளிகள் இன்றளவில் சாட்சியமாக வெளியாகி இருக்கின்றன. Biryani Delivery: வெஜ் பிரியாணி கேட்ட சைவ பிரியருக்கு அதிர்ச்சி.. கண்ணீருடன் வெதும்பிய பெண்.!
விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள்:
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில், இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்தவர்கள் அலட்சியடத்துடன் வலப்புறம்-இடப்புறம் பார்க்காமல், வரும் வாகனத்தை கவனிக்காமல் அப்படியே கடந்தனர். இதனால் அவ்வழியே சென்ற ஈச்சர் லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கினர். இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் நிலை என்ன ஆனது? என்ற விபரங்கள் தெரியவில்லை. களநிலவரம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்றுகொண்டு இருந்த நிலையில், அதனை கவனித்தபடி சென்றவர்கள் சாலையின் பின்புறம் வந்த வாகனத்தை கவனிக்கவில்லை. இதனால் விபத்து நேர்ந்தது.
பதறவைக்கும் விபத்தின் சிசிடிவி காணொளி:
न दाएं देखना है, न बाएं देखना है। डायरेक्ट रोड क्रॉस कर दो। एक्सीडेंट होगा तो बड़े वाहन वाले पर इल्ज़ाम ठोक देंगे।
📍 जिला मुजफ्फरनगर, यूपी pic.twitter.com/OmKxquUpvu
— Sachin Gupta (@SachinGuptaUP) April 7, 2025