Operation Sindoor: கணவரை இழந்த பெண்களுக்கு பதில் சொல்லும் 'ஆபரேஷன் சிந்தூர்'.. தாக்குதலை தொடங்கிய இந்தியா.!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழிக்க இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' ஐ தொடங்கி இருக்கிறது.

Operation Sindoor: கணவரை இழந்த பெண்களுக்கு பதில் சொல்லும் 'ஆபரேஷன் சிந்தூர்'.. தாக்குதலை தொடங்கிய இந்தியா.!
Operation Sindoor (Photo Credit: @ANI X)

மே 07, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 மதியம் 2 மணிக்கு மேல் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தானியர்கள் விசாவை ரத்து செய்து அவர்களை வெளியேற உத்தரவிட்டது. காஷ்மீர் பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளை தேடி வேட்டையாடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..! 

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor):

இந்நிலையில், மே 7ம் தேதியான இன்று அதிகாலை 1 மணிக்கு மேல் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உட்பட 9 பயங்கரவாத அமைப்புகளின் இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போர் நடவடிக்கை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தேசிய அளவில் பாராட்டுக்கள் குவிகிறது. அதேபோல, இன்று மாலை 4 மணியளவில் தேசிய அளவில் போர் சூழல் களப்பயிற்சிகளும் நடக்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட விபரங்கள்:

(The above story first appeared on LatestLY on May 07, 2025 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).