'வெற்றிதான் எங்கள் பயிற்சியே.. எங்கும் எப்போதும் தயார்' - எதிரிகளுக்கு பிரகடனம் செய்த இந்திய இராணுவம்..!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து தாக்குதல் திட்டம் நடந்து முடிந்ததும் இந்திய இராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.
மே 07, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 மதியம் 2 மணிக்கு மேல் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அரசு இன்று (மே 07) ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 1972ம் ஆண்டுக்குப்பின்னர் இந்திய இராணுவத்தின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் நிலைகள் குறிவைக்கப்பட்டு 80 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்திய இராணுவத்தின் நவீனத்தன்மை மற்றும் உளவுத்தகவல் கொண்டு பாகிஸ்தானிய பொதுமக்கள் ஒருவரும் பாதிக்கப்படாத வண்ணம் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவம் பாயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மேலும், எல்லையில் உள்ள இந்திய கிராமங்களில் இருக்கும் மக்கள் மீது நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் காஷ்மீர் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் இராணுவத்தினரால் மீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Operation Sindoor: இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. பட்டியலிட்டு பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்.. வெளியான வீடியோ..!
தாக்குதல் முடிந்ததும் வீடியோ வெளியிட்ட இந்திய இராணுவம்:
அதிகாலை சுமார் 01:05 மணிமுதல் 01:30 வரை சரியாக 25 நிமிடங்களில் பாகிஸ்தான் ஆதரித்த பயங்கரவாத கூட்டத்தை இந்தியா ஒரே நேரத்தில் வேட்டையாடி அழித்தது. இந்த தாக்குதல் குறித்த செய்திகள் இன்று காலை வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் வியக்க வைத்தது. 26 அப்பாவி பொதுமக்களின் உயிரை பறித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்திய தேசமும் பாகிஸ்தானுக்கு எதிராக, பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது. இந்நிலையில், இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி முடிந்த நள்ளிரவு நேரத்தில் தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் இந்திய இராணுவம் எங்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும். தேசத்துக்காக முன்வந்து நிற்கும் என பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அது உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் வெளியிட்ட வீடியோ:
"प्रहाराय सन्निहिताः, जयाय प्रशिक्षिताः"
Ready to Strike, Trained to Win.#IndianArmy pic.twitter.com/M9CA9dv1Xx
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 6, 2025
(The above story first appeared on LatestLY on May 07, 2025 08:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

