இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றம்.. திடீரென ரஷ்யா செல்லும் மோடி? வெளியான தகவல்..!

ரஷ்யாவில் மே 9ஆம் தேதி நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பில், பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றம்.. திடீரென ரஷ்யா செல்லும் மோடி? வெளியான தகவல்..!
PM Narendra Modi & Putin (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 30, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கிடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. Pahalgam Terror Attack: அடுத்தகட்ட நடவடிக்கை.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டும் இந்தியா..!

மோடியின் ரஷ்ய பயணம் ரத்து:

இதனிடையே, மே 9 ஆம் தேதி மாஸ்கோவில் (Moscow) நடைபெறும் வெற்றி தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi), ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், மே 9 ஆம் தேதி ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில், பிரதமர் நரேந்திர மோடி மாஸ்கோவிற்கு செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா:

ரஷ்ய நாட்டின் இராணுவ மற்றும் வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வான, இந்த ஆண்டு நினைவு அணிவகுப்பில் பங்கேற்க பல நட்பு நாடுகளின் தலைவர்களையும் ரஷ்யா அழைத்திருந்தது. தற்போது, பிரதமர் மோடி செல்ல முடியாததால், இந்தியா சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வார் என்று ரஷ்ய தரப்புக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).