ஆகஸ்ட் 26, மைசூர் (Karnataka News): கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் (Kannur) மாவட்டத்தில் வசித்து வந்தவர் தர்ஷிதா (வயது 20). இவரின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே தர்ஷிதாவுக்கு உறவினரான சித்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்காதல் ஜோடியாக இருவரும் வலம் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தர்ஷிதா தனது மாமியார் வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை திருடி கொண்டு சித்தராஜுடன் கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பெண் பயணியிடம் ஓடும் இரயிலில் அத்துமீறல்.. சிக்கியதும் கதறிய கான்ஸ்டபிள்.!
காதலியின் வாயில் ஜெலட்டின் குச்சிகளை சொருகி கொன்ற கள்ளக்காதலன் :
இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹூன்சூர் பகுதியில் உள்ள லாட்ஜில் (Mysore Lodge) வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். இதனிடையே திருடி வந்த பணத்தை பங்கிடுவது தொடர்பாக இருவருக்கும் விடுதி அறையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சித்திரராஜு சுரங்கத்தில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை (Gelatin Sticks) தர்ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க வைத்துள்ளார்.
செல்போன் வெடித்து உயிரிழந்ததாக நாடகம் :
இதனால் கதறிய தர்ஷிதா முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாட்ஜில் இருந்தவர்களிடம் அவரது செல்போன் வெடித்துவிட்டதால் உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார். இதனை நம்பாத லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தர்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சித்திராஜுவை கைது செய்து விசாரித்த போது உண்மை அம்பலமானது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.