Kolkata Shocker: விவாகரத்துக்கு விண்ணப்பித்து மனைவியை கொலை செய்த கணவன்; நிம்மதியின்மையால் நடந்த பயங்கரம்.!

கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம் நடந்தது.

Kolkata Shocker: விவாகரத்துக்கு விண்ணப்பித்து மனைவியை கொலை செய்த கணவன்; நிம்மதியின்மையால் நடந்த பயங்கரம்.!
Crime File Picture (Photo Credit: PIxabay)

அக்டோபர் 16, கொல்கத்தா (Kolkata News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா, ஹரிதேவ்பூர் (Haridevpur) பகுதியில் வசித்து வருபவர் சுவேந்து தாஸ் (வயது 32). இவரின் மனைவி கிருஷ்ணா தாஸ் (வயது 22). தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இருவரும் கணவன் மனைவியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கிருஷ்ணாவின் பெற்றோருக்கு மகளின் திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் பெற்றோரை எதிர்த்து வந்து சுவேந்துவை திருமணம் செய்துள்ளார்.

சுவேந்து தாஸ் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக தம்பதிகள் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. Gujarat Accident: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து; சாலையோரம் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்.! 

இந்த திருமணத்தால் தான் மிகுந்த கஷ்டப்படுவதாக நினைத்த சுவேந்து தாஸ், மனைவி கிருஷ்ணாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்றத்திலும் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதிலும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சுவேந்து தாஸ், மனைவி கிருஷ்ணா தாஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின், தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். கிருஷ்ணாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நிலையை உணர்ந்துகொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுவேந்து தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 16, 2023 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).