ஜனவரி 01, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டம், ஆவண்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஆனந்த் பாபுஜி பாட்டில். இவரின் மனைவி அருணா பாட்டில் (வயது 40). தம்பதிகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
குடிக்கு அடிமை: இந்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் ஆனந்த், எப்போதும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி உறவு என்பது மிகவும் கசப்பானதாக மாறி, அருணா தனது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார்.
பணம் கேட்டு தகராறு: கடந்த சனிக்கிழமை இரவு மது போதையில் வந்த ஆனந்த், மேலும் மதுபானம் குடிக்க வேண்டும் என்று கூறி மனைவி அருணாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அருணாவோ தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார். இதனை கேட்காத ஆனந்த், தனது மனைவியை திட்டி, தாக்கிவிட்டு போதையில் உறங்கிவிட்டார். Tirupattur Accident: குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று தம்பதிகள்; இருசக்கர வாகனம் - லாரி மோதி நடந்த பயங்கரம்.!
கல்லால் தாக்கி கொலை: இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்து வந்த அருணா, உறக்கத்திலிருந்து எழுந்து உறங்கிக் கொண்டிருந்த கணவரை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இந்த கொலையை அரங்கேற்றிய அருணா அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
மனைவி கைது: பின் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அருணாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரது கணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குடிக்கு அடிமையாகும் மூடர்களின் வீட்டில் அனுமதினமும் நடக்கும் கொடுமைகளில், சில இவ்வாறான சோகத்திற்கு வழிவகை செய்கிறது.
மது நாட்டிற்கு, வீட்டிற்கு, உடல்நலத்திற்கு கேடுதரும்.. உயிரை பறிக்கும்.