HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் - போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!

பாலியல் ரீதியான உறவை 16 வயதுடைய சிறுமி தனது விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HC on Minor Girl Having Sex: 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக உணர்வுபூர்வ முடிவு எடுக்கலாம் - போக்ஸோ வழக்கில் காதலன் விடுதலை..!
Meghalaya Court (Photo Credit: meghalayahighcourt.nic.in)

ஜூன் 23, மேகாலயா (Meghalaya News): மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தில் 16 வயது சிறுமி தனது ஆண் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவுபெற்று இன்று நீதிபதி டபிள்யூ. டியெங்டோ (Justice W. Diengdoh) அமர்வில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

Minor Girl Abused | Teenage Love Couple File Picture (Photo Credit: Siasat.com / WikiHow)

அப்போது, நீதிபதி, "16 வயதுடைய பெண்ணின் ஆண் நண்பர்கள், இருவரும் சம்மதத்துடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக்கொண்டுள்ளனர். இதனால் மேற்படி வழக்கு போக்ஸோவில் வராது. 16 வயதுடைய பெண் தனது பாலியல் ரீதியான உறவை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய எந்த தடையும் இல்லை.

இதனால் மேற்படியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை நிரபராதியாக அறிவிக்கும் நீதிமன்றம், அவரை விடுதலை செய்கிறது. ஏனெனில் இவ்வழக்கில் 16 வயது பெண்ணின் முடிவுக்கு எதிராக அல்லது பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி எதுவும் நடைபெறவில்லை. இருவரின் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறுகிறது" என தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jun 23, 2023 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).