4 People Drowned In River: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி..!
உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 10, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தெலியார் கிராமத்திற்கு அருகே காக்ரா ஆறு (Ghaghra River) அமைந்துள்ளது. ஆற்றில் குளிக்க அந்த கிராமத்தை சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர். இதில் ஒருவர் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். அவரை காப்பாற்ற சென்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Poco M6 4G: 108MP முதன்மை கேமராவுடன் புதிய போக்கோ M6 4G ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தெலியார் கிராமத்தை சேர்ந்த சுசீலா (வயது 52), சத்யம் (வயது 24), ஊர்வசி (வயது 17) மற்றும் கன்ஹா (வயது 10) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இதில் உயிருடன் மீட்கப்பட்ட நைனி என்பவர் மட்டும் மிகவும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

