செப்டம்பர் 07, உஜ்ஜைன் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் (Ujjain) கடந்த செப்டம்பர் 04-ஆம் தேதி, நடுரோட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் (Rape) செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில், பலாத்காரம் செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். Husband Dies In Shock Wife's Death: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் பலி; அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்த சோகம்..!
சாலையில் பட்டப்பகலில் பெண் பலாத்காரம்:
உஜ்ஜைனி, அகர்நாக்கா பகுதியில் ஒரு பெண் குப்பைகளை பொறுக்கி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த நபர் பெண்ணை மது குடிக்க வைத்துள்ளார். பின்னர், மது போதையில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் கோய்லா பாட்டக் என்ற சாலையில் பட்டப்பகலில் நடந்துள்ளது. இதில், கொடுமை என்னவெனில் நடுரோட்டில் பெண் பலாத்காரம் செய்யப்படுவதை யாரும் தடுக்காமல், அதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பின் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
வீடியோ எடுத்த நபர் கைது:
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில், லோகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட முகமது சலீம் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், பிரகாஷ் நகர் நாக்டாவில் வசித்து வருகிறார். மேலும், ஆட்டோ ஓட்டுநராக (Auto Driver Arrested) வேலை பார்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக, மேலும் சிலரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.