Foreign Woman Rape: யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. பயிற்சியாளர் கைது..!
கர்நாடகாவில் யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 03, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு (Chikkamagaluru) அருகேயுள்ள மல்லேனஹள்ளி கிராமத்தில் யோகா மற்றும் தியான மையம் உள்ளது. இங்கு கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த யோகா பயிற்சி மையத்தில் பெங்களூருவை சேர்ந்த பிரதீப் என்பவர் பயிற்சியாளராக (Yoga Teacher) பணியாற்றி வந்துள்ளார். Lorry-Bus Accident: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி..!
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இங்கு வந்து 10 நாட்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அந்த பெண்ணை யோகா பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துள்ளார். பின்னர், இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் சிக்கமகளூரு புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். பலாத்காரம் செய்தது உறுதியானதை அடுத்து, அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

