நவம்பர் 15, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் (Roorkee) கார் விபத்தில் சிக்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 6 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 13 அன்று இரவில் பார்ட்டியில் குடித்து ஆடிவிட்டு, போதையில் வாகனம் ஓட்டியுள்ளனர். அந்த காரில் 7 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, வேகமாக வந்த கார் கண்டெய்னர் மோதியதில் (Car Accident), 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Road Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் விபத்து நடந்த இரவில் குடித்து பார்ட்டி செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய கும்பல்:
A video of a few moments before the death of 6 young men and women in an accident that happened 2 days ago in Dehradun is going viral. After the party, everyone left in a car.. death struck them on the way and they lost their breath.#viralvideo #Uttarakhand pic.twitter.com/JeJDwt6Uw0
— Anjali Sharma (@Anjali_sharma50) November 14, 2024