Minor Girl Rape Case in Thane (Photo Credit: @ndtv X)

அக்டோபர் 23, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், தானே (Thane) மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 37 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பிவாண்டி பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பிறந்தநாளான அன்று, சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமார் சர்மா (வயது 37) சிறுமிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கித் தருவதாகவும், தன்னுடன் வருமாறும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 13 Year Old Minor Girl Rape: 13 வயது சிறுமி வன்கொடுமை முயற்சி.. ஏரியில் குதித்து குற்றவாளி தற்கொலை..!

சிறுமி பாலியல் வன்கொடுமை:

இதன்பின்னர், அவர் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுமியை தகாத முறையில் தொட்டு, பாலியல் தொல்லை (Sexual Assault) கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன சிறுமி இதுகுறித்து வீட்டில் கூறவில்லை. இந்நிலையில், சிறுமியின் தந்தை அக்டோபர் 22ஆம் தேதி பிவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமார் சர்மாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3