PM Narendra Modi Victory: வாரணாசி தொகுதியில் 1.82 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி..!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முதல் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். அவரின் வெற்றியை தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): 18வது மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள், ஜூன் 04ம் தேதியான இன்று வெளியாகிறது. உலகளவில் கவனிக்கப்படும் இந்தியா தேர்தல்கள் 2024-ல் 8,320 வேட்பாளர்கள் 543 தொகுதியில் போட்டியிட்டு முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற சொல்வழக்கு ஏற்ப இன்று மக்களின் தீர்ப்பு வெளியாகிறது. இந்த தீர்ப்பை இந்திய மக்கள் மட்டுமல்லாது, இந்திய அரசை கட்டுப்படும் தீர்ப்பு என்பதால் உலகளாவிய தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பாஜக கூட்டணி முதலிடம்: இன்று காலை முதலாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் தனியே 235+ தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், கூட்டணியுடன் சேர்த்து 294 தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 232+ தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். DMK A Mani Victory: திமுக கைவசம் சென்றது தர்மபுரி தொகுதி: தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி.!
கூட்டணிக்கட்சிகளுக்கு அழைப்பு: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி அடைகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமில்லாமல் போயுள்ளது. இதனால் கூட்டணிக்கட்சி தலைவர்களை பாஜக தலைமை நாளை காலை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சி தலைமை தனது கூட்டணிக்கட்சி தலைவர்களை இன்று மாலை அல்லது இரவுக்குள் டெல்லி வருமாறு அழைத்துள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் வெற்றி: இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 61139 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 459084 பெற்று, 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த வெற்றி உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல் பாஜக வெற்றி ஆகும்.
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

